கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கிற இந்த நாடகம் ; உலக நாடகங்களின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்ரிக் இப்சனால் எழுதப்பட்டது. அதனால் அதன் கலையம்சம் , கதையம்சம் பற்றி நான் இங்கே கூறத் தேவையில்லை. மொழி பெயர்ப்பை மட்டும் பார்த்த வகையில் யாரும் இ. தியாகலிங்கத்தை இதற்குப் பாராட்டாமல் கடந்து செல்லமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இந்த நாடகம் ; நாடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம். ஹென்ரிக் இப்சனின் சிறந்த நாடகமாய் ஒரு பொம்மை வீடு கருதப்படுகிறது. கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் அதற்குச் சளைத்தது இல்லை. அத்தோடு தியாகலிங்கத்தின் அழகு தமிழும் சேர்ந்து , வாசிக்கும் கணங்களைத் திரைப்படம் பார்க்க வைப்பது போல் இருக்கிறது. தமிழில் பல இலக்கியங்கள் , சில இலக்கியப் படைப்பாளர்கள் , ஏனோ பேசப்படுவதில்லை , கண்டு கொள்ளப் படுவதில்லை. தமிழக இலக்கிய ஜாம்பவான்களிடம் ஓடுவதும் , அவர்களை அழைத்து வந்து விருந்தோம்புவதும் , அவர்களுக்கு விருது கொடுப்பதும் , அதனால் நல் விமர்சனங்களையும் , புகழ் மொழியையும் , விருதுகளையும் அதற்குக் கையூட்டாக வாங்குவதுமாகத் தமிழ் இலக்கிய உலகு காசடைந்து கிடக்க...