கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கிற இந்த நாடகம்; உலக நாடகங்களின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்ரிக் இப்சனால் எழுதப்பட்டது. அதனால் அதன் கலையம்சம், கதையம்சம் பற்றி நான் இங்கே கூறத் தேவையில்லை. மொழி பெயர்ப்பை மட்டும் பார்த்த வகையில் யாரும் இ. தியாகலிங்கத்தை இதற்குப் பாராட்டாமல் கடந்து செல்லமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
இந்த நாடகம்; நாடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம். ஹென்ரிக்
இப்சனின் சிறந்த நாடகமாய் ஒரு பொம்மை வீடு கருதப்படுகிறது. கெல்கலாண்டில் யுத்த வீரர்கள்
அதற்குச் சளைத்தது இல்லை. அத்தோடு தியாகலிங்கத்தின் அழகு தமிழும் சேர்ந்து, வாசிக்கும் கணங்களைத் திரைப்படம்
பார்க்க வைப்பது போல் இருக்கிறது.
தமிழில் பல இலக்கியங்கள், சில இலக்கியப் படைப்பாளர்கள், ஏனோ பேசப்படுவதில்லை, கண்டு கொள்ளப் படுவதில்லை. தமிழக இலக்கிய ஜாம்பவான்களிடம் ஓடுவதும், அவர்களை அழைத்து வந்து விருந்தோம்புவதும், அவர்களுக்கு விருது கொடுப்பதும், அதனால் நல் விமர்சனங்களையும், புகழ் மொழியையும், விருதுகளையும் அதற்குக் கையூட்டாக வாங்குவதுமாகத் தமிழ் இலக்கிய உலகு காசடைந்து கிடக்கிறது. அதைவிடப் பல அரசியல்கள். அதனால் பேசப்படாத நல்ல படைப்புக்கள், அவற்றைப் படைத்த எழுத்தாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அப்படி பேசப்படாதவர்களில் ஆளுமையான படைப்பாளிகளும் உண்டு. அவற்றை இனம் காண வேண்டியது தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் அவசியமாகின்றது. அதில் தியாகலிங்கமும் ஒருவர் என்று நான் எண்ணுகிறேன்.
இளைய சந்திரன்
இத்தாலி

கருத்துகள்
கருத்துரையிடுக