இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
    கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கிற இந்த நாடகம் ; உலக நாடகங்களின் தந்தை என்று அழைக்கப்படும்   ஹென்ரிக் இப்சனால் எழுதப்பட்டது. அதனால் அதன் கலையம்சம் , கதையம்சம் பற்றி நான் இங்கே கூறத் தேவையில்லை. மொழி பெயர்ப்பை மட்டும் பார்த்த வகையில் யாரும் இ. தியாகலிங்கத்தை இதற்குப் பாராட்டாமல் கடந்து செல்லமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இந்த நாடகம் ; நாடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம். ஹென்ரிக் இப்சனின் சிறந்த நாடகமாய் ஒரு பொம்மை வீடு கருதப்படுகிறது. கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் அதற்குச் சளைத்தது இல்லை. அத்தோடு தியாகலிங்கத்தின் அழகு தமிழும் சேர்ந்து , வாசிக்கும் கணங்களைத் திரைப்படம் பார்க்க வைப்பது போல் இருக்கிறது. தமிழில் பல இலக்கியங்கள் , சில இலக்கியப் படைப்பாளர்கள் , ஏனோ பேசப்படுவதில்லை , கண்டு கொள்ளப் படுவதில்லை. தமிழக இலக்கிய ஜாம்பவான்களிடம் ஓடுவதும் , அவர்களை அழைத்து வந்து விருந்தோம்புவதும் , அவர்களுக்கு விருது கொடுப்பதும் , அதனால் நல் விமர்சனங்களையும் , புகழ் மொழியையும் , விருதுகளையும் அதற்குக் கையூட்டாக வாங்குவதுமாகத் தமிழ் இலக்கிய உலகு காசடைந்து கிடக்க...
படம்
  வே - நாவல் ஆசிரியர்: இ. தியாகலிங்கம் , Notionpress மற்றும் Amazon- இல் வெளியிடப்பட்டு இருக்கிறது. தியாகலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர் , நோர்வேயில் வசிக்கிறார். இவர் பல நாவல்கள் , குறு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.  வே நாவல் , மற்றும் கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கின்ற ஹென்ரிக் இப்சனின் தமிழாக்க நாடகம் ஆகியவை தற்செயலாக   நண்பர் ஒருவர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதால் யுஅயணழ n- இல் அவற்றை வாசித்தேன். அவரது பல படைப்புகள் அங்கே இருக்கின்றன.  முதலில் வே நாவலைப் பார்ப்போம். ஈழப் பிரச்சனை என்பதால் என்னிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதைத் தலைகீழாக்கிய உணர்வு நாவலைப் படித்து முடித்தபோது ஏற்பட்டது என்பது உண்மை. யுத்த நாவலாக நேரடி முகம் காட்டாது கிணற்றுக்குள் தேடி எலும்பைக் கண்டு பிடிப்பதான மறக்கப்பட்ட உண்மை தோண்டும் ஒரு முயற்சி. இப்படியான முயற்சிகளும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.   ஈழ யுத்தம் தொடங்க முதலே பல கொலைகள் நடந்தன. அவை அப்படியே மறக்கப்பட்டும் விட்டன. ஆனால் அவர்களின் உறவுகளிடம் இருந்து அந்த வலியைக் காலம் அகற்றி...