விமர்சனங்களோடு வருவோம்
வே - நாவல் ஆசிரியர்: இ. தியாகலிங்கம் , Notionpress மற்றும் Amazon- இல் வெளியிடப்பட்டு இருக்கிறது. தியாகலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர் , நோர்வேயில் வசிக்கிறார். இவர் பல நாவல்கள் , குறு நாவல்கள் மற்றும் சிறுகதைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். வே நாவல் , மற்றும் கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கின்ற ஹென்ரிக் இப்சனின் தமிழாக்க நாடகம் ஆகியவை தற்செயலாக நண்பர் ஒருவர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதால் யுஅயணழ n- இல் அவற்றை வாசித்தேன். அவரது பல படைப்புகள் அங்கே இருக்கின்றன. முதலில் வே நாவலைப் பார்ப்போம். ஈழப் பிரச்சனை என்பதால் என்னிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதைத் தலைகீழாக்கிய உணர்வு நாவலைப் படித்து முடித்தபோது ஏற்பட்டது என்பது உண்மை. யுத்த நாவலாக நேரடி முகம் காட்டாது கிணற்றுக்குள் தேடி எலும்பைக் கண்டு பிடிப்பதான மறக்கப்பட்ட உண்மை தோண்டும் ஒரு முயற்சி. இப்படியான முயற்சிகளும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். ஈழ யுத்தம் தொடங்க முதலே பல கொலைகள் நடந்தன. அவை அப்படியே மறக்கப்பட்டும் விட்டன. ஆனால் அவர்களின் உறவுகளிடம் இருந்து அந்த வலியைக் காலம் அகற்றி...
கருத்துகள்
கருத்துரையிடுக